Tuesday, November 5, 2013

என்ன இந்த USB என்பது?

Universal Serial Bus என்பதனையே நாம் சுருக்கமாக USB என அழைக்கின்றோம். இது கணனிக்கும் ஏனைய இலத்திரனியல் சாதனங்களுக்கும் இடையில் தரவுகளை பரிமாற்றிக்கொள்ள இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது.


USB இன் ஆரம்ப காலப்பகுதி 1996 ஆகும். 1996 ஜனவரி மாதமே USB 1 எனும் பதிப்பு உலகுக்கு உத்தியோக பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அதிகூடிய வேகம் 12 Mbit/s ஆக இருந்தது. பின் USB 1 இருந்த சில குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு 1998 ஆகஸ்ட் மாதம் USB 1.1 எனும் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

பின் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் USB 2.0 (Hi-Speed) எனும் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. USB 2.0 இன் அதிகூடிய வேகம் 480 Mbit/s ஆகும்.

பிறகு 5 Gbit/s எனும் அதிவேக தரவு பரிமாற்றத்தினை சாத்தியமாக்கும் வகையில் USB 3.0 (SuperSpeed)அறிமுகப்படுத்தப்பட்டது. இது அறிமுகப்படுத்தப்பட்டது 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதமாகும்.

இதனையடுத்து அறிமுகப்படுத்தப்பட்டதே USB 3.1 (SuperSpeed+) ஆகும். இது 10 Gbit/s எனும் வேகத்தில் தரவுகளை பரிமாரிக்கொள்ளக் கூடியதாகும் இது ஜனவரி மாதம் 2013 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

USB 2.0 மற்றும் USB 3.0 ஆகியவற்றினை அடிப்படையாக கொண்ட சாதனங்களே புழக்கத்தில் உள்ளன என்றாலும் USB 3.1 இனை அடிப்படையாக கொண்ட சாதனங்கள் மிக விரைவில் சந்தைக்கு வந்து விடும் என்பதில் ஐயமில்லை.

எனவே கணணி வன்பொருள்களினை கொள்வனவு செய்யும் போது இந்த USB எனும் மந்திரத்தினை கவனத்தில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment