Tuesday, June 9, 2015

iOS 9

San Francisco நகரில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் WWDC நிகழ்வில் iOS 9 உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

iOS இன் இந்த புதிய பதிப்பில், ஏற்கனவே இருந்த iOS 8 இல் இருந்த வசதிகள் மேம்படுத்தப் பட்டுள்ளதுடன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பில் கூடுதல் பாதுகாப்பினையும் வழங்கியுள்ளது.
iOS இல் இருக்கும் Siri எனும் வசதியானது மேலும் 40% வேகமாகவும் துல்லியமாகவும் இயங்கக்கூடிய வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் iOS 9 பதிப்பினை iPhone சாதனங்களில் நிறுவுவதன் மூலம் குறிப்பிட்ட சாதனத்தின் சக்தியை (Battery life) மேலும் மூன்று மணித்தியாலங்களுக்கு அதிகரித்துக்கொள்ள முடியும்.
அத்துடன் News எனும் புதியதொரு செயலியும் இந்த பதிப்பின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவைகள் தவிர மேலும் பல வசதிகளுடனும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடனும் iPhone சாதனங்களில் வலம் வர இருக்கும் iOS 9 தொடர்பான இந்த தகவல் iPhone பயனர்களுக்கு சுவையாக அமையும் என்பதில் ஐயமில்லை.
Sources: Apple (http://goo.gl/1hWyKl)

No comments:

Post a Comment