Thursday, June 25, 2015

எமக்குத் தேவையான ஆவணங்களை மிக இலகுவாகவும் நேர்த்தியாகவும் தயாரித்துக்கொள்ள Microsoft Office மென்பொருள் உதவுகின்றது.

எமக்குத் தேவையான ஆவணங்களை மிக இலகுவாகவும் நேர்த்தியாகவும் தயாரித்துக்கொள்ள Microsoft Office மென்பொருள் உதவுகின்றது.
இது அனைவராலும் அறியப்பட்ட ஏராளமான வசதிகளை தரக்கூடிய ஒரு மென்பொருளாகும்.

ஆரம்பத்தில் இது கணினி மூலமாகவே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் தற்பொழுது மிக வேகமாக வளர்ந்து வரும் Smart Phone துறைக்கும் நகரத் துவங்கி உள்ளது.
அந்த வகையில் Microsoft Office, Microsoft Excel, Microsoft PowerPoint போன்றவற்றினை Android Smart Phone கள் மூலம் பயன்படுத்துவதற்கான செயலிகளை Microsoft நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
Microsoft Office மென்பொருளின் Smart சாதங்களுக்கான பதிப்பு ஏற்கனவே அறிமுகப்படுத்தப் பட்டிருந்தாலும் அவைகள் அனைத்தும் Microsoft Office எனும் ஒரே செயலியில் Word, Excel, மற்றும் PowerPoint என மூன்றும் தரப்பட்டு வரையறுக்கப்பட்ட வசதியே தரப்பட்டிருந்தது.
என்றாலும் ஒரு சில தினங்களுக்கு முன் Microsoft நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட Microsoft Office செயலியின் ஊடாக கணினியில் தரப்பட்டுள்ள Microsoft Office மென்பொருளுக்கு ஈடான வகையில் ஏராளமான பல வசதிகள் தரப்பட்டுள்ளன.
இந்த Smart சாதனத்துக்கான செயலிகள் மூலம் நீங்கள் ஆவணங்களை உருவாக்கும் போது Charts, Animations, SmartArt Graphic, Shapes, Images, Footnotes, Formulas, Tables போன்ற எந்த ஒன்றினையும் இணைத்துக்கொள்ள முடியும்.
இது பற்றி மேலும் அறியவும் இதனை உங்கள் Android சாதனங்களுக்கு தரவிறக்கிக் கொள்ளவும் கீழுள்ள இணைப்பில் செல்க.

No comments:

Post a Comment