இணையத்தில் இருக்கும் சில இணையதளங்களுக்கு செல்வதால் குறிப்பிட்ட தளத்திலிருந்து பரவும் வைரஸ் கோப்புக்கள் காரணமாக எமது கணனியும் பாதிப்படைவதுண்டு.
அல்லது சில தளங்கள் குறிப்பிட்ட ஒரு பிரபலமான இணைய தளம் போன்று போலியான தோற்றத்தை கொண்டிருப்பதுண்டு. இது போன்ற தளங்களில் எமது கடனட்டை இலக்கங்களை நாம் உள்ளிட்டு விட்டால் அடுத்த சில நிமிடங்களில் எமது நிலைமை பரிதாபத்துக்கு உள்ளானதாகிவிடும்.
மேலும் முகநூலிலும் கூட சில சுவாரஷ்யமான தலைப்புகளைக் கொண்ட இணைப்புக்கள் தோன்றும் தவறியாவது நீங்கள் அதனை சுட்டி விட்டால் அவைகளை நீங்கள் பகிர்ந்துள்ளதாக உங்கள் நண்பர்களுக்கும் சென்று விடும் ஆனால் உண்மையில் நீங்கள் அவற்றினை பகிர்ந்து இருக்க மாட்டீர்கள்.
எனவே அது போன்ற எமக்கு தீங்கு விளைவிக்கும் தீய இணையதளங்களிலிருந்து எம்மை பாதுகாக்கக் உதவுகின்றது Safe Preview எனும் Google Chrome இணைய உலாவிக்கான நீட்சி.
இதனை உங்கள் இணைய உலாவியில் நிறுவிய பின் நீங்கள் இணையத்தில் காணும் எந்த ஒரு சந்தேகத்துக்கு இடமான இணைப்புக்களையும் சோதித்து அறிந்துகொள்ள முடியும்.
குறிப்பிட்ட ஒரு இணைப்பை ஆறு வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களை கொண்டு இது சோதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நீங்களும் இதனை உங்கள் Chrome இணைய உலாவிக்கு நிறுவிக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
=====> http://goo.gl/hDnBTd
No comments:
Post a Comment