Saturday, October 4, 2014

VLC Media Player

வீடியோ கோப்புக்களை பார்ப்பதற்கான சிறந்த மென்பொருள்களில் VLC Media Player உம் ஒன்றாகும். இது வெறுமனே வீடியோ கோப்புக்களை பார்ப்பதற்கு என்று மட்டும் நின்று விடாது வீடியோ கோப்புக்களின் வடிவத்தை மாற்றிக் கொள்வதற்கும் (Convert) உதவுகின்றது.

இதன் மூலம் நீங்களும் உங்கள் வீடியோ கோப்புக்களின் வடிவத்தினை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டால்
● VLC Media Player இனை திறந்து Media என்பதனை சுட்டுவதன் மூலம் Convert/Save (Ctrl+R) என்பதனை சுட்டுக.
● பின் பெறப்படும் சாளரத்தில் File எனும் Tab இற்கு கீழ் இருக்கும் Add என்பதன் மூலம் நீங்கள் Convert செய்ய வேண்டிய வீடியோ கோப்புக்களை தெரிவு செய்து Convert/Save என்பதை சுட்டுக.
● பிறகென்ன நீங்கள் குறிப்பிட்ட வீடியோ கோப்பினை எந்த வடிவத்திற்கு மாற்ற விரும்புகின்றீகளோ அந்த வீடியோ கோப்பின் வடிவத்தினையும் Convert செய்யப்படும் வீடியோ கோப்பு சேமிக்கப் படவேண்டிய இடத்தினையும் தெரிவு செய்து Start என்பதனை அலுத்துக.
● அவ்வளவுதான் சிறிது நேரத்தில் குறிப்பிட்ட வீடியோ கோப்பின் வடிவம் மாற்றப்பட்டு நீங்கள் தெரிவு செய்த இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.
VLC Media Player இன் புதிய பதிப்பை தரவிறக்கிக் கொள்ள கீழுள்ள இணைப்பில் செல்க

No comments:

Post a Comment