இதற்கு பல #காரணங்கள் இருந்தாலும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஏராளமான கோப்புக்கள் நிரல்களை உங்கள் கணினியில் திறந்து பயன்படுத்துவதும் இதற்கு ஒரு முக்கியமான காரணமாக குறிப்பிடலாம்.
இதனால் CPU மற்றும் RAM போன்றவற்றின் உச்ச பயன்பாட்டை கணினி எடுத்துக் கொள்கின்றது. இதனால் உங்கள் கணினி ஒரு கனம் திக்கு முக்காடி நிற்கும் என்பதில் ஐயமில்லை.
இது போன்ற சந்தர்பங்களில் Task Manager மூலம் CPU மற்றும் RAM இன் பயன்பாட்டை எந்த நிரல் எந்த அளவு எடுத்துக்கொள்கின்றது என்பதனை அறிந்துகொள்ள முடியும். இருந்தாலும் Task Manager இனை விட ஒரு படி மேல் சென்று Resource Monitor எனும் நிரல் இது தொடர்பான பரந்துபட்ட தகவல்களை தருகின்றது.
CPU, Memory, Disk, Network போன்றவற்றின் அந்த நேரத்துக்குரிய பூரண பயன்பாட்டை Graph வடிவில் அவதானிக்க முடிவதுடன் CPU, Memory, Disk, Network போன்றவற்றின் பயன்பாட்டில் ஒவ்வொரு நிரல்களும் எந்த அளவு பயன்பாட்டினை எடுத்துக்கொள்கின்றது என்பதனையும் வெவ்வேறாக பார்க்க முடியும்.
எனவே உங்கள் கணனி உறையும் சந்தர்ப்பங்களில் இதனை திறந்துகொல்வதன் மூலம் உங்கள் கணினியின் CPU, Memory, Disk, Network போன்றவற்றின் அதிக பயன்பாட்டினை எடுத்துக் கொள்ளும் மென்பொருள்களை கண்டறிந்து அவற்றின் செயற்பாட்டை நிறுத்துவதன் மூலம் உங்கள் கணனியின் மூலம் வேகமான அனுபவத்தினை உணர்ந்திடலாம்.
Resource Monitor ஐ உங்கள் கணனியில் வரவழைப்பதற்கு RUN Program இல் resmon என தட்டச்சு செய்து Enter அலுத்துக.
.
.
No comments:
Post a Comment