பொதுவாக கணினியுடன் இணைக்கப்படும் #வன்பொருள் (Hard Disk) சாதனங்கள் இயங்குதளத்துடன் ஒத்திசைவதற்காக Driver#மென்பொருள்கள் நிறுவப்படுகின்றன.
அவ்வாறு உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அத்தனை Driver மென்பொருள்கள் தொடர்பான விபரங்களையும் அறிய விரும்பினால் உங்கள் கணினியில் உள்ள Command Prompt ஐ திறந்து driverquery என தட்டச்சு செய்து Enter அழுத்துவதன் மூலம் உங்கள் கணினியில் உள்ள அனைத்து Driver களும் பட்டியல் படுத்தப்படும்.
நீங்கள் அவற்றினை Text Document ஆக பெற்றுக் கொள்ள விரும்பினால் driverquery என்பதுடன் > MyDrivers.txt & MyDrivers.txt என்பதனை தட்டச்சு அழுத்துவதன் மூலம் அதனை Text Document இல் பெற்றுக் கொள்ளலாம்.
இது பின்வருமாறு அமையும்.
driverquery > MyDrivers.txt & MyDrivers.txt
அதே போல் உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள driver தொடர்பான விலாவாரியான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் எனின் Command Prompt இல் driverquery /FO list /v என தட்டச்சு செய்ய அவைகள் ஒவ்வொன்று தொடர்பிலும் தனித்தனியான தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
அதாவது குறிப்பிட்ட ஒரு Driver இன் பெயர், அது உங்கள் கணினியில் நிறுவப்பட்ட நாள், நேரம், அதன் வகை, அதன் அளவு, அது உங்கள் கணினியில் இருக்கும் இடம், அது இயங்குகின்றதா? அல்லது நிறுத்தப்பட்ட நிலையில் உள்ளதா? போன்ற இன்னும் பல தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு விலாவாரியாக பெறப்படும் தகவல்களை Text Document இல் பெற்றுக் கொள்ள விரும்பினால் Command Prompt இல் driverquery /FO list /v > MyDriverDetails.txt & MyDriverDetails.txt என தட்டச்சு செய்து Enter அலுத்துக.
அவ்வளவுதான்.
● உங்கள் கணினியில் Command Prompt ஐ திறந்து கொள்ள Run Program இல் CMD என தட்டச்சு செய்து Enter அலுத்துக.
● Run Program ஐ திறந்து கொள்ள Win Key உடன் R ஐ அலுத்துக.
No comments:
Post a Comment