உங்கள் கணனியில் உள்ள ஒரு கோப்புறையில் ஏராளமான கோப்புக்கள் இருக்கின்றது என வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த கோப்புக்கள் அனைத்தினதும் பெயர்களை Copy செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் என்ன செய்யலாம்.
உதாரணமாக Songs எனும் கோப்புறையில் 1000 பாடல்கள் இருந்தால் அவைகள் ஒவ்வொன்றினதும் பெயர்களை Copy செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் தனித்தனியாக Copy செய்வதா?
அவ்வாறு தனித்தனியாக Copy செய்து Notepad இல் Past செய்யும் போது பொழுதுபட்டுவிடும் அல்லவா?
எனவே இதற்கு எளிய வழிமுறை ஒன்று Windows கணனியில் உள்ளது.
நீங்கள் பெயர்களை Copy செய்ய வேண்டிய கோப்புக்கள் இருக்கும் கோப்புறையினை Shift அழுத்தியவாறு Right Click செய்யுங்கள். (மேலுள்ள உதாரணத்தின் படி Songs எனும் கோப்புறையை Shift அழுத்தியவாறு Right Click செய்ய வேண்டும்)
பின் திறக்கும் Context Menu இல் Open Command window here என்பதை சுட்டுக.
இனி திறக்கும் Command Prompt இல் dir /b >filename.txt என்பதனை தட்டச்சு செய்து Enter அலுத்துக.
அவ்வளவு தான்...........!!
பிறகு குறிப்பிட்ட கோப்புறையினுள் filename எனும் பெயரில் அமைந்த ஒரு Notepad இல் அனைத்து கோப்புக்களினதும் பெயர்கள் பிரதி செய்யப்பட்டிருப்பதனை அவதானிக்கலாம்.
.
.
No comments:
Post a Comment