உங்கள் கணனியின் வன்தட்டு அதிகம் வெப்பமடையும் போது அது உங்கள் கணனியின் வேகத்திலும் குறிப்பிட்ட அளவு பாதிப்பை ஏற்படுத்தும்.
இது போன்ற சந்தர்பங்களில் நீங்கள் பயன்படுத்துவது மடிக்கணனி எனின் அதற்கு ஏற்ற Cooling Pad இனை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கணனி அதிகம் வெப்பமடைவதை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.
உங்கள் கணனி எந்த அளவு வெப்பமடைகின்றது என்பதனை அறிந்து கொள்ள Temperature Taskbar எனும் மென்பொருள் உதவுகின்றது.
வெறும் 12 kb அளவையே கொண்டுள்ள இந்த மென்பொருளை தரவிறக்கி Double Click செய்வதன் மூலம் மிக இலகுவாக பயன் படுத்திக் கொள்ளலாம்.
இதனை Double Click செய்த பின் இது உங்கள் taskbar இல் வந்தமர்ந்து கொள்ளும். பின் உங்கள் கணனி சாதாரண வெப்பநிலையில் இருக்கும் போது பச்சை நிறத்திலும், அதனை விட சற்று அதிகமாக வெப்பம் வெளிப்படும் போது மஞ்சள் நிறத்திலும், அதிக வெப்பத்துடன் இயங்கும் போது சிவப்பு நிறத்திலும் இதன் சமிஞ்ஞைகள் Taskbar இல் வெளிப்படுத்தப்படும்.
இதன் மூலம் உங்கள் கணனியின் வன்தட்டு அதிகம் வெப்பமடைகின்றதா? அதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமா? என்பவைகளை அறிந்து கொள்ள முடியும்.
Download Temperature Taskbar ====> http://goo.gl/5qdYtB
No comments:
Post a Comment