உங்கள் கணனி மூலம் பாடல்கள் அல்லது ஏனைய ஒலிகள் வெளிப்படும் போது அதன் தாளத்துக்கு ஏற்ப பல வர்ணங்களில் அமைந்த மின்குமிழ்கள் விட்டு விட்டு எரியும் காட்சியை தருகின்றது DiscoLights எனும் மென்பொருள்.
ஏழு வர்ணங்களில் மெய்நிகரான வர்ண மின்குமிழ்களை ஒத்த இதன் தோற்றமானது பயன் படுத்தக் கூடிய அனைவரையும் பரவசப்படுத்துகின்றது.
உங்களுக்கு விருப்பம் போல் இதன் அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும்.
2.5 MB அளவையே கொண்ட இதனை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்திப் பார்க்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
No comments:
Post a Comment