Saturday, July 26, 2014

Driver Booster

உங்கள் கணனியின் வன்பொருள்களை Windows இயங்குதளம் இனங்கண்டு கொள்வதற்காக நிறுவப்படும் மென்பொருள்களே Drivers எனும் மென்பொருள்கள் ஆகும்.
Audio Drivers, Video Drivers, Network Drivers என நீண்டு செல்லும் இதன் பட்டியாலானது உங்கள் கணனியில் நிறுவப்படும் ஒவ்வொரு வன்பொருள் சாதனத்துக்கும் நிறுவப்படும்.
எனவே அவ்வாறான Drivers மென்பொருள்கள் குறிப்பிட்ட வன்பொருளை தயாரித்து வெளியிட்ட நிறுவனத்தால் காலத்துக்குக் காலம் மேம்படுத்தப்பட்டு வெளியிடப்படுவதுண்டு.
இவ்வாறான மேம்படுத்தப்பட்ட பதிப்புக்களை நாம் தரவிறக்கி கணனியில் நிறுவிக்கொள்வதன் மூலம் குறிப்பிட்ட வன்பொருள் சாதனத்தின் மூலம் தடையற்ற, வினைத்திறனான பயன்களை பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே எமது கணனியில் இருக்கக் கூடிய ஒவ்வொரு வன்பொருள் சாதனத்துக்குமான Drivers மென்பொருள்களை தனித்தனியாக இனங்கண்டு மேம்படுத்துவதென்பது சிரமமான காரியம் அலாவா?
இதனை மிக இலகுவாக நிறைவேற்றிக்கொள்ள உதவுகின்றது Driver Booster எனும் மென்பொருள்.
இதனை தரவிறக்கி நிறுவிக்கொள்வதன் மூலம் உங்கள் இருக்கக் கூடிய வன்பொருள் சாதனங்களுக்காக நிறுவப்பட்டிருக்கும் காலாவதியாகிய Drivers களை இனங்கண்டு அறியத்தருவதுடன் அவற்றினை புதிய பதிப்புக்கு மேம்படுத்திக் கொள்ளவும் உதவுகின்றது.
சிறியோர் முதல் பெரியோர் வரை எந்த ஒரு தரப்பினராலும் மிக இலகுவாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் எளிமையான இடைமுகத்தினை கொண்டுள்ள இந்த மென்பொருளை நீங்களும் தரவிறக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
=====> http://j.mp/DriverBooster (15.7MB)
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது பதிவுகளை தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment