Memory Cleaner எனும் மென்பொருளானது எமது Windows கணனியின் RAM Memory எந்த அளவு பயன்படுத்தப்படுகின்றது என்பதனை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது.
சிறிய அளவையே கொண்டுள்ள இந்த மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவிய பின் அதனை திறப்பதன் மூலம் உங்கள் கணனியில் உள்ள மொத்த RAM Memory எவ்வளவு? அதில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பகுதி எவ்வளவு? என்பதனை அறிந்து கொள்ள முடிவதோடு குறிப்பிட்ட மென்பொருளில் தரப்பட்டுள்ள Trim Processes' Working Set மற்றும் Clear System Cache என்பவைகளை சுட்டுவதன் மூலம் உங்கள் கணனியின் நினைவகத்தில் தேவையின்றி பயன்படுத்தப்படும் நிரல்களை நீக்கி கணனியை வேகமாக இயங்க செய்யவும் முடியும்.
இது தவிர இந்த மென்பொருளின் Option எனும் பகுதி மூலம் உங்கள் கணனியின் நினைவகம் 80 சதவீதத்திற்கும் அதிகமான அளவு பயன்படுத்தப்படும் சந்தர்பத்தில் அல்லது ஒவ்வொரு 5 நிமிடத்துக்கு ஒருமுறை நினைவகத்தில் பயன்படுத்தப்படும் தேவையற்ற நிரல்களை தானாக நீக்கிக் கொள்ளும் வகையில் அமைத்திடவும் முடியும்.
இந்த மென்பொருளை உங்கள் கணணியிலும் நிறுவி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
====> http://goo.gl/4T1X6n
No comments:
Post a Comment