பல்வேறு வசதிகள் கருதி இன்று ஏராளமானோர் தமது ஆவணங்களை தயாரித்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு ஆவண வடிவமே PDF ஆகும்.
இன்று ஏராளனமான மின்னூல்கள் கூட இதனை அடிப்படையாகக் கொண்டே வெளிவருகின்றது.
விடயம் என்னவெனில் smallpdf எனும் இணைய தளமானது எமது PDF கோப்புக்களை நிருவகிக்க என சிறந்த வசதிகளை தருகின்றது.
இந்த தளம் மூலம் அளவில் அதிகமான ஒரு PDF ஆவணத்தின் அளவை குறைத்துக்கொள்ள முடிவதுடன் JPG வடிவில் அமைந்துள்ள புகைப்படங்களை PDF வடிவத்துக்கும் PDF வடிவில் அமைந்துள்ள ஆவணங்களை JPG எனும் புகைப்பட வடிவத்திற்கும் மாற்றிக்கொள்ள முடியும்.
மேலும் Word, Excel, Powerpoint போன்ற ஆவணங்களையும் மிக இலகுவாக PDF வடிவத்திற்கு மாற்றி அமைத்துக் கொள்ள முடிவதுடன் வெவ்வேறு பட்ட பல PDF ஆவணங்களை ஒன்றாக இணைத்துக்கொள்ளவும் குறிப்பிட்ட ஒரு PDF ஆவணத்தை பல்வேறு பகுதிகளாக பிரித்துக் கொள்ளவும் உதவுகின்றது.
ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட அனைவருக்கும் பயனளிக்கும் இந்த தளமானது இலகுவாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மிக எளிமையாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
நீங்களும் இந்த தளத்துக்கு செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
No comments:
Post a Comment