நீங்களும் Google Chrome இணைய உலாவியை பயன்படுத்துபவரா?
சோதிக்கப்படாத, நபகத்தன்மை அற்ற அல்லது தொழில்நுட்ப தளங்களால் பரிந்துரைக்கப்படாத சில மென்பொருள்களை நாம் கணனியில் நிறுவுவதானால் அவைகள் மூலம் எமது இணைய உலாவிக்கு Extension, மற்றும் Tool Bar போன்றவைகள் தானாகவே நிருவப்படுவதுண்டு.
இதனால் நாம் இணையத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் அடிக்கடி விளம்பரங்கள் தோன்றி நமக்கு தொல்லை தரும் நிகழ்வுகளும் ஏற்படவே செய்கின்றன.
அது மட்டுமல்லாமல் சில சந்தர்பங்களில் நாம் ஒரு இணைய தளத்துக்கு செல்ல முயற்சிக்கையில் அதுவோ வேறு ஒரு பாதுகாப்பற்ற தளத்துக்கு செல்லும் வகையில் Redirect ஆவதும் உண்டு.
இது போன்று இணைய உலாவிகள் மூலம் எழும் இன்னும் பல பிரச்சினைகளுக்கு தீர்வை தருகின்றது Software removal tool எனும் Google தரும் மென்பொருள்.
இந்த மென்பொருளை தரவிறக்கி இயக்குவதன் மூலம் உங்கள் இணைய உலாவியில் நிறுவப்பட்ட தேவையற்ற நிரல்களை நீக்கிக் கொள்ள முடிவதுடன் விளம்பரத் தொல்லைகளில் இருந்தும் விடுதலை பெறலாம்.
Google Chrome இணைய உலாவியை பயன்படுத்தும் பயனர்களுக்கு பெரிதும் பயனளிக்கக்கூடிய இந்த மென்பொருளை நீங்களும் தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
No comments:
Post a Comment