Sunday, September 28, 2014

Anti Theft

உங்கள் Android சாதனம் வைக்கப்பட்ட இடத்தில் இருந்து நகர்த்தப்பட்டால் அதனை அறிந்துகொள்ள உதவுகின்றது Anti Theft எனும் Android சாதனத்துக்கான மென்பொருள்.

உங்கள் Android சாதனத்தை குறிப்பிட்ட ஒரு இடத்தில் வைத்துவிட்டு இந்த மென்பொருளை இயக்கிவிட்டால் போதும்.
இனி உங்கள் Android சாதனம் அந்த இடத்தில் இருந்து நகர்த்தப்பட்டால் ஒரு பெரிய ஒலியை ஏற்படுத்தும் இனி அதனை நகர்த்தியவர் யார் என்று மிக இலகுவாக அறிந்துகொள்ளலாம்.
மேலும் இதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு வைப்பதன் மூலம் குறிப்பிட்ட Android சாதனம் நகர்த்தப்படும் போது அந்த சாதனத்தின் முன்பக்க Camera மூலம் புகைப்படங்கள் பிடிக்கப்பட்டு அதனை நீங்கள் உள்ளிட்டிருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு உடானடியாக பெற்றுக்கொள்ளவும் முடியும்.
இவைகள் தவிர உங்கள் Android சாதனத்துடன் Charger இணைக்கப்பட்டிருக்கும் போது அது அகற்றப்பட்டால் மேற்குறிப்பிட்டது போன்ற ஒலியை ஏற்படுத்தி உங்களுக்கு அறியத்தரும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது. (இந்த வசதியை நீங்கள் விரும்பினால் Settings பகுதியினூடாக செயற்படுத்திக்கொள்ளலாம்)
இந்த மென்பொருளை நீங்களும் உங்கள் Android சாதனத்துக்கு தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

No comments:

Post a Comment