iPhone 6 ஆனது 4.7 அங்குல (1334 x 750 pixels) Retina HD திரையை கொண்டிருப்பதுடன் iPhone 6 Plus ஆனது 5.5 அங்குல (1920 x 1080 pixels) திரையை கொண்டுள்ளது.
மேலும் iPhone 6 மற்றும் iPhone 6 Plus முறையே 6.9mm, 7.1mm தடிப்பினைக் கொண்டுள்ளன.
அத்துடன் இந்த Smart Phone களில் Apple A8 processor எனும் புதிய வகை Processor பயன்படுத்தப்பட்டுள்ளது. இது முன்னைய பதிப்புக்களில் பயன்படுத்தப்பட்ட A7 Processor ஐ விட 25 சதவீதம் வேகமாக இயங்கக்கூடியதுடன் முன்னையதை விட 50 சதவீதம் திறனாக செயற்படக்கூடியதும் ஆகும்.
இவ்விரண்டும் 16GB, 64GB, 128GB ஆகிய உள்ளக நினைவகங்களை கொண்டிருப்பதுடன் எதிர்வரும் 19 ஆம் திகதி இவைகள் விற்பனைக்காக விடப்பட உள்ளன.
iPhone 6 16GB ஆனது 649 அமெரிக்க டொலர்களுக்கும் iPhone 6 Plus 128 GB ஆனது 949 அமெரிக்க டொலர்களுமாக விலை குறிக்கப்பட்டுள்ளது. (ஏனையவைகள் இதற்கு இடைப்பட்ட விலையை கொண்டிருக்கும்.)
.
.
Sources: Apple (http://www.apple.com/iphone-6)
.
.
Sources: Apple (http://www.apple.com/iphone-6)
No comments:
Post a Comment