Friday, September 12, 2014

WonderFox Video Converter Factory Pro

WonderFox Video Converter Factory Pro மென்பொருளானது எமது வீடியோ கோப்புக்களை நிர்வகிக்க உதவும் சிறந்த மென்பொருள்களில் ஒன்றாகும்.

இந்த மென்பொருள் மூலம் எந்த ஒரு வீடியோ கோப்பினையும் நீங்கள் விரும்பும் வடிவத்திற்கு மாற்றியமைத்துக் கொள்ள முடிவதுடன் உங்கள் Smart சாதனங்களுக்கு ஏற்றவகையிலும் அவற்றினை மாற்றிக்கொள்ள முடியும்.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பல வீடியோ கோப்புக்களின் வடிவத்தை மாற்றியமைக்க உதவும் இந்த மென்பொருளானது குறிப்பிட்ட வீடியோ கோப்பின் தரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாதவகையில் மிகவேகமாக செயற்படக்கூடியதுமாகும்.
மேலும் video to HD video, video to AVI, video to MP4, video to MKV, video to WMV, video to H264, video to AVC, video to MPG, video to MOV, video to 3GP, video to MP3, OGG, AC3, AAC, MKA, WMA, FLAC, M4A என 150 இற்கும் மேற்பட்ட வடிவங்களுக்கு ஆதரிக்கும் இந்த மென்பொருள் மூலம் YouTube, Facebook, Myspace, Yahoo, Vimeo video உட்பட இன்னும் பல வீடியோ கோப்புக்கள் பகிரப்படும் தளங்களில் உள்ள வீடியோ கோப்புக்களை நீங்கள் விரும்பிய வடிவத்திற்கு மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.
இவைகள் தவிர உங்கள் வீடியோ கோப்புக்களுக்கு பல்வேறுபட்ட விளைவுகளை ஏற்படுத்திக்கொள்ளவும், அவற்றினை Cut, Crop, Merge செய்து கொள்ளவும் என பல வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த மென்பொருளானது 49 அமெரிக்க டொலர் கட்டணம் செலுத்திப் பெற வேண்டிய ஒரு மென்பொருளாகும்.
இருப்பினும் கீழுள்ள இணைப்பில் சென்று Get Now என்பதனை சுட்டுவதன் மூலம் இதற்கான Licence Key உடன் இதனை இலவசமாகவே தரவிறக்கிக் கொள்ள முடியும்.
★ குறிப்பு:
● இந்த சலுகை இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே.
● இந்த மென்பொருளுடன் DVD இறுவட்டுக்களில் இருக்கக்கூடிய வீடியோ கோப்புக்களை Rip செய்வதற்கான WonderFox Free DVD Ripper எனும் இலவச மென்பொருளும் தரப்பட்டுள்ளது. (தேவை எனின் அதனையும் நிறுவிக்கொள்ளலாம்)

No comments:

Post a Comment