Monday, September 22, 2014

fixpicture

fixpicture எனும் தளமானது உங்கள் புகைப்படங்களின் தன்மையை மாற்றிக்கொள்ள பெரிதும் உதவுகின்றது.

இந்த தளம் மூலம் JPEG, TIFF, PNG, GIF, BMP, TGA, ICO, ICNS, PDF போன்ற வடிவங்கள் உட்பட 400 க்கும் மேற்பட்ட வடிவங்களில் அமைந்திருக்கக் கூடிய எந்த ஒரு புகைப்படத்தினதும் தன்மையை ஒரு சில வினாடிகளில் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.
எந்த ஒரு வடிவத்திலும் அமைந்திருக்கக் கூடிய உங்கள் புகைப்படங்களை JPEG, TIFF, PNG, GIF, PDF போன்ற வடிவங்களுக்கு மாற்றி அமைத்துக் கொள்ள முடிவதுடன் அவ்வாறு மாற்றி அமைக்கப்படும் படங்களின் தரம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதனை Good, Better, Best எனும் தெரிவுகள் மூலம் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ளவும் முடியும்.
மேலும் குறிப்பிட்ட தளத்தில் தரப்பட்டுள்ள RESIZE எனும் வசதி மூலம் அதன் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவும், ROTATION என்பதன் மூலம் நிலையை மாற்றிக்கொள்ளவும் EFFECT என்பதன் மூலம் அதன் தோற்றத்தில் மாற்றத்தினை ஏற்படுத்திக்கொள்ளவும் முடியும்.
நீங்களும் குறிப்பிட்ட தளத்துக்கு செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
இந்த தளத்தில் நீங்கள் மாற்றங்களை ஏற்படுத்திக்க கொள்வதற்காக தரவேற்றும் உங்கள் புகைப்படங்களின் அதிகூடிய அளவு 3MB ஆக இருத்தல் வேண்டும்.
.
.
.
.
.
மேலும் 200 க்கும் மேற்பட்ட வடிவங்களுக்கு Video கோப்புக்களை Convert செய்து கொள்ள உதவும் உதவும் ஒரு இலவச மென்பொருள் பற்றி அறிய விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

No comments:

Post a Comment