Friday, September 12, 2014

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?
கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் Google கணக்கிற்கு உரிய 5 மில்லியனுக்கும் மேற்பட்ட கடவுச்சொற்கள் திருடப்பட்டுள்ளன.

அவற்றுள் உங்கள் கணக்கும் திருடப்பட்டிருக்குமா? என்பதை அறிந்து கொள்ள உதவுகின்றது isleaked எனும் இணையதளம்.
இந்த தளத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுவதன் மூலம் இதனை அறிந்துகொள்ளலாம்.
உங்கள் மின்னஞ்சல் முகவரியை நீங்கள் முழுமையாக உள்ளிட விரும்பாவிட்டால் குறிப்பிட்ட முகவரியில் உள்ள மூன்று எழுத்துக்களுக்கு பதிலாக நட்சத்திரக் குறியீட்டை பயன்படுத்திக்கொள்ளலாம்.
உதாரணத்திற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி myaccount@gmail.com எனின் அதனை myac***nt@gmail.com என்பதாக உள்ளிடலாம்.
குறிப்பிட்ட தளத்திற்குச் செல்ல கீழுள்ள இணைப்பை சுட்டுக.

No comments:

Post a Comment