Android சாதனத்தில் தரப்பட்டிருக்கக் கூடிய YouTube மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் அடிக்கடி வீடியோ கோப்புக்களை பார்வையிடுகின்றீர்களா?
அப்படியாயின் புதிய பல மேம்படுத்தல்களுடன் Android சாதனத்துக்கான YouTube மென்பொருள் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் புதிய பதிப்பில் வீடியோ கோப்புக்களை தேடிப் பெருவதற்காக நீங்கள் உள்ளிடக் கூடிய சொற்களில் எழுத்துப்பிழை இருக்குமெனின் அதனை தானாகவே திருத்திக் கொள்ளும் வசதி இதில் தரப்பட்டுள்ளதுடன் நீங்கள் பார்க்கக்கூடிய வீடியோ கோப்புக்களின் தரத்தை தெரிவு செய்துகொள்ளும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னைய பதிப்பில் இருந்த பல குறைபாடுகள் இதில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இதன் புதிய பதிப்பை தரவிறக்கிக் கொள்ள அல்லது ஏற்கனவே இருக்கும் பதிப்பை மேம்படுத்திக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
No comments:
Post a Comment