நாம் நமக்கு என்றே ஒரு தனிப்பட்ட கணணியை பயன்படுத்தினாலும் கூட அதனை சிலவேளைகளில் நமது சகோதர சகோதரிகள், உறவினர்கள் அல்லது நண்பர்கள்
பயன்படுத்தும் சந்தர்பங்களும் ஏற்படுவதுண்டு அல்லவா? இது போன்ற சந்தர்பங்களில் எமது தனிப்பட்ட தகவல்களை அவர்கள் பார்க்க முடியாதவாறு மறைத்து வைப்பதற்கு பல்வேறு மென்பொருள்கள் உள்ளது. Lock folder மேலும் இதனையும் பார்க்க: உங்கள் கணனியில் உள்ள ஒரு கோப்புறைக்கு கடவுச்சொல் இட்டு பாதுகாக்க உதவும் அருமையான இலவச மென்பொருள். இருப்பினும் பின்வரும் வழிமுறையை பின்பற்றுவதன் மூலம் எவ்வித மென்பொருள்களினது உதவியும் இன்றி கணனியில் இருக்கக் கூடிய எமது தனிப்பட்ட தகவல்களை கடவுச்சொல் இட்டு மறைத்துக் கொள்ளலாம்.
இதனை நீங்களும் உங்கள் Windows கணனியில் மேற்கொள்ள விரும்பினால். 1. முதலில் Right Click செய்து New Text Document ஒன்றை உருவாக்கிக் கொள்க.
Right click 2. பின்வரும் இணைப்பை சுட்டும்போது தோன்றும் இணையப்பக்கத்தில் உள்ள நிரல்களை Copy செய்து நீங்கள் உருவாக்கிய Text Document இல் Paste செய்க.
Click Here & Copy Your Code (Copy செய்யும் போது 1,2,3,4………. எனும் தொடர் இலக்கங்களை Copy செய்ய வேண்டாம்.) 3. பின் குறிப்பட்ட Text Document இல் File ====> Save As என்பதனை சுட்டும்போது தோன்றும் சாளரத்தில் File Name என்பதில் Lock.bat எனவும் Save type as என்பதில் All files என்பதையும் தெரிவு செய்து சேமித்துக் கொள்க.
save type as wndow 4. பின் Lock எனும் புதியதொரு கோப்பு உருவாகிருப்பதனை அவதானிப்பீர்கள். bat file
5. பிறகு அதனை உங்கள் தனிப்பட்ட கோப்புக்கள் இருக்கும் இடத்திற்குள் Pasteசெய்து அதனை Double Click செய்க.
6. இனி MyFolder எனும் ஒரு கோப்புறை உருவாக்கப்படும். பின் MyFolder எனும் ஒரு கோப்புறைக்குள் உங்கள் தனிப்பட்ட கோப்புக்களை Paste செய்து Lock எனும் கோப்பினை மீண்டும் Double Click செய்க.
7. இனி Are you sure to lock this folder? <Y/N> என்ற செய்தியுடன் ஒரு Command Prompt தோன்றுவதனை அவதானிப்பீர்கள். பின் அதில் y என்பதனை தட்டச்சு செய்து Enter அலுத்துக. command prompt ● அவ்வளவு தான் இனி MyFolder எனும் கோப்புறை மறைக்கப்பட்டுவிடும்
8. பின் மறைக்கப்பட்ட MyFolder எனும் கோப்புறையை திறந்து கொள்ள Lock எனும் கோப்பினை Double Click செய்க.
9. பிறகு Enter password to Unlock Your Secure Folder எனும் செய்தியுடன் தோன்றும் Command Prompt இல் newstig என தட்டச்சு செய்து Enter அலுத்துக. command prompt window ★ இனி MyFolder எனும் கோப்புறை மீண்டும் தோன்றுவதனை அவதானிப்பீர்கள். குறிப்பு: இங்கு newstig எனும் கடவுச்சொல்லுக்கு பதிலாக நீங்கள் விரும்பும் கடவுச்சொல் ஒன்றை இட்டுக் கொள்ள மேற்கூறிய நிரல்களில் Ijtech எனும் இடத்தில் நீங்கள் விரும்பும் ஒரு கடவுச்சொல்லை இட்டுக்கொள்க.
No comments:
Post a Comment