Wednesday, August 13, 2014

feewhee

உங்கள் கணனியில் நீங்கள் திறந்து பயன்படுத்தும் மென்பொருள்கள், கோப்புறைகள் என எந்த ஒன்றினது அளவுகளையும் Scroll Wheel மூலம் மாற்றிக்கொள்ள உதவுகின்றது feewhee எனும் சிறியதொரு மென்பொருள். (Resize)

இதனை உங்கள் கணனியில் நிறுவவேண்டிய அவசியமில்லை feewhee எனும் கோப்பினை Double Click செய்தால் போதும்.
பின் அளவை மாற்ற வேண்டிய மென்பொருளின் அல்லது கோப்புறையின் மேற்பகுதியில் Cursor ஐ வைத்து Scroll Down/Up செய்து பாருங்கள்.
இனி அதன் அளவில் மிக இலகுவாக மாற்றத்தினை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
இங்கு அளவு என குறிப்பிடப்படுவது குறிப்பிட்ட மென்பொருளின் அல்லது கோப்புறையின் நீளம் மற்றும் அகலமாகும்.
இதனை Startup கோப்புறையில் சேர்ப்பதன் மூலம் கணனி துவங்கும் போதே இந்த மென்பொருளையும் துவங்கச் செய்யலாம்.
இதனை தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க. (4kb)

No comments:

Post a Comment