Tuesday, August 19, 2014

நாம் எமது கணனியில் உள்ள வன்தட்டினை (Hard Disk) எமது வசதிக்கு ஏற்ப பல பாகங்களாக பிரித்து பயன்படுத்துவோம் அல்லவா?

நாம் எமது கணனியில் உள்ள வன்தட்டினை (Hard Disk) எமது வசதிக்கு ஏற்ப பல பாகங்களாக பிரித்து பயன்படுத்துவோம் அல்லவா?

அவ்வாறு பிரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் வெவ்வேறான ஆங்கில எழுத்துக்கள் வழங்கப்பட்டிருக்கும்.
இருப்பினும் அவ்வாறு வழங்கப்பட்டுள்ள ஆங்கில எழுத்துக்களையும் நீங்கள் விரும்பிய விதத்தில் மாற்றிக்கொள்ள Windows கணனியில் வசதி உள்ளது.
குறிப்பிட்ட ஒரு பாகத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில எழுத்தினை நீங்களும் மாற்றிக்கொள்ள விரும்பினால் கீழுள்ள வழிமுறைகளை பின்பற்றுக.
❶ உங்கள் கணனியில் Run Program ஐ திறந்து diskmgmt.msc என தட்டச்சு செய்து Enter அலுத்துக.
(Run Program ஐ திறக்க பல வழிகள் உள்ளது Win+R விசைகளை அழுத்துவதன் மூலம் மிக இலகுவாக திறந்து கொள்ளலாம்.)
❷ பின் திறக்கும் சாளரத்தில் உங்கள் கணனியில் உள்ள வன்தட்டின் பாகங்கள் அனைத்தும் அதற்கான ஆங்கில எழுத்துடன் பட்டியல் படுத்தப்பட்டிருக்கும். (படம் இல: 1)
❸ பின் நீங்கள் ஆங்கில எழுத்தினை மாற்ற விரும்பும் வன்தட்டின் பாகத்தினை Right Click செய்து Change Drive letter and Paths என்பதனை சுட்டுக.
❹ பின் தோன்றும் உப சாளரத்தில் Change என்பதனை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட பாகத்திற்கான ஆங்கில எழுத்தினை மாற்றிக்கொள்ள முடியும். (படம் இல: 2, 3)
அவ்வளவுதான்.
.
.
.
மேலும் எவ்வித மென்பொருள்களினதும் துணையின்றி உங்கள் கணனியின் Hard Disk ஐ எவ்வாறு Partition செய்து கொள்ளலாம் எனும் எமது பதிவை பார்க்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
★ தொழில்நுட்ப சொற்கள்
● சாளரம் - Window
● தட்டச்சு - Typing
● வன்தட்டு - Hard Disk

No comments:

Post a Comment