USB Safely Remove எனும் மென்பொருளானது உங்கள் கணனியுடன் இணைக்கப்பட்டுள்ள USB சாதனங்களை நிருவகிக்க உதவுகின்றது.
இந்த மென்பொருள் நிறுவப்பட்டவுடன் Task Bar இல் இதற்க்கான ICon தோன்றும் பின் அதனை சுட்டுவதன் மூலம் உங்கள் கணனியுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து USB சாதனங்களையும் ஒரே பார்வையில் பார்த்துக்கொள்ள முடிவதுடன் உங்கள் கணனியில் இருந்து நீங்கக வேண்டிய USB சாதனத்தை ஒருமுறை சுட்டுவதன் ஊடாக Safely Remove செய்து கொள்ளவும் முடியும்.
பொதுவாக Safely Remove செய்யப்பட்ட USB சாதனத்தை மீண்டும் பயன்படுத்த வேண்டும் எனின் அதனை கணனியில் இருந்து நீக்கிய பின் மீண்டும் இணைக்க வேண்டும் இருப்பினும் இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ள Return Device Back! என்பதனை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட சாதனத்தை கணனியில் இருந்து நீக்கி மீண்டும் இணைக்க வேண்டிய சிரமம் இல்லை.
இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை தரும் இந்த மென்பொருளானது கட்டணம் செலுத்தி பெறவேண்டிய ஒரு மென்பொருளாகும்.
இருப்பினும் பின்வரும் இணைப்பில் சென்று உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுவதன் மூலம் இந்த மென்பொருளை முற்றிலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்வதற்கான License Key மற்றும் தரவிரக்கச்சுட்டி போன்றவைகள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
பிறகு என்ன தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.
இந்த மென்பொருள் பற்றி மேலும் அறிய கீழுள்ள இணைப்பில் செல்க.
இதற்க்கான இலவச License Key ஐ பெற கீழுள்ள இணைப்பை சுட்டுக.
குறிப்பு: இந்த சலுகை எந்த ஒரு நேரத்திலும் முடிவுக்கு வரலாம்.
No comments:
Post a Comment