எமது கணனியில் இருக்கக்கூடிய வீடியோ கோப்புக்கள், இசைகள், ஆவணங்கள், புகைப்படங்கள் போன்ற வற்றினை இறுவட்டுக்களுக்கு பதிந்து கொள்ள உதவுகின்றது Ashampoo® Burning Studio 2014 எனும் மென்பொருள்.
மேலும் இந்த மென்பொருள் மூலம் CD, DVD மற்றும் Blu-ray போன்ற இறுவட்டுக்களில் இருக்கக்கூடிய தரவுகளை அதே போன்ற வெற்று இருவட்டுக்களுக்கு மிக இலகுவாக பிரதி செய்து கொள்ள முடிவதுடன் உங்கள் கணனியில் இருக்கக்கூடிய புகைப்படங்களை பயன்படுத்தி உயர் தெளிவுத்திறனில் அமைந்த Slideshow போன்றவற்றினையும் உருவாக்கிக்கொள்ள முடியும்.
இவைகள் தவிர இன்னும் ஏராளமான பல வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த மென்பொருளின் சந்தைப்பெருமதியானது 50 அமெரிக்க டொலர்களாகும்.
இருப்பினும் பின்வரும் இணைப்பில் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுவதன் மூலம் அந்த மென்பொருளின் முழுமையான பதிப்பையும் இலவசமாக பயன்படுத்துவதற்கான license key உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பு: உங்கள் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிட்ட பக்கத்தில் உள்ளிட்ட பின் உங்களுக்கான Confirmation Link அனுப்பி வைக்கப்படும். பின் அதனை சுட்டும் போது தோன்றும் இணையப்பக்கத்தில் உங்கள் பெயர், பிறந்த திகதி போன்றவற்றினை உள்ளிட வேண்டி இருக்கும். இருப்பினும் அவற்றினை கட்டாயமாக உள்ளிட வேண்டிய அவசியம் இல்லை. Not Now என்பதனை அழுத்துவதன் மூலம் உங்களுக்கான license key ஐ பெற்றுக்கொள்ளவும் முடியும். (Help: http://j.mp/Screenshot_TIT)
● இலவச license key பெறுவதற்கான பக்கம் =====>http://j.mp/Ashampoo_Burning_Studio_2014
● Ashampoo® Burning Studio 2014 தரவிறக்க ====>http://goo.gl/8H9CqI [90 MB]
● Ashampoo® Burning Studio 2014 பற்றி மேலும் அறிய: ====>http://goo.gl/jKcTPj
No comments:
Post a Comment