Windows கணனியில் தரப்பட்டுள்ள Cursor ஐ நீண்ட நாட்களாக ஒரே தோற்றத்தில் பார்த்து சலிப்படைந்து விட்டீர்களா?
அப்படியாயின் அதற்கு அழகிய பல விளைவுகளுடன் புதுத் தோற்றத்தினை கொடுக்க உதவுகின்றது CursorFX எனும் மென்பொருள்.
உங்கள் Windows கணனியில் இருக்கக்கூடிய Cursor இற்கு பதிலாக Animation விளைவை ஏற்படுத்தும் Cursor களை பயன்படுத்திக் கொள்ள முடிவதுடன் நீர்த்துளி வடிவில் அமைந்த Cursor மற்றும் விரல் அமைப்பைக் கொண்ட Cursor என ஏராளமான பல வடிவங்கள் இதில் தரப்பட்டுள்ளது.
இது தவிர இன்னும் பல வசதிகள் இதில் தரப்பட்டுள்ளது. இருப்பினும் முழுமையான வசதிகளை பெற வேண்டுமாயின் இதனை கட்டணம் செலுத்தியே பெறவேண்டும்.
எது எப்படியோ ஒரு தனிப்பட பயனாளருக்கு இதன் இலவச பதிப்பு தரும் வசதிகளே போதுமானது. (512MB Ram)
இதன் இலவச பதிப்பை தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
====> http://j.mp/CursorFX
No comments:
Post a Comment