Tuesday, August 19, 2014

Google தேடியந்திரத்தின் மூலம் ஒரு தகவலை தேடும் போது குறிப்பிட்ட தகவல்கள்

நாம் Google தேடியந்திரத்தின் மூலம் ஒரு தகவலை தேடும் போது குறிப்பிட்ட தகவல்கள் உள்ள ஏராளமான தளங்கள் பட்டியல் படுத்தப்படுமல்லவா?

எனவே நாம் குறிப்பிட்ட தகவலை பெற ஒரு தளத்துக்குச் சென்று அந்த தளத்தில் சரியான தகவல் கிடைக்கவில்லை எனின் தேடல் முடிவில் வந்த இன்னுமொரு தளத்துக்குச் செல்வோம் அல்லவா?
இருப்பினும் Google தேடியந்திரத்தின் மூலம் பெறப்படும் முடிவுகளுக்கான பக்கத்திலேயே நீங்கள் தகவலை பெற செல்லும் பக்கங்களும் தோன்றுவதனால் மீண்டும் Google தேடியந்திரத்தினை திறந்து அதனை தேட வேண்டி இருக்கும் அல்லது மீண்டும் பின் செல்ல வேண்டும்.
இவ்வாறன சிரமத்தினை தவிர்த்துக்கொள்ள தேடல் முடிவில் வரும் இணைய தளங்களை புதியதொரு Tab இல் தோன்றும் வகையில் Google இன் அமைப்பினை மாற்றிக்கொள்ள முடியும்.
❶ எனவே இதனை நீங்களும் மேற்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
❷ பின் குறிப்பிட்ட பக்கத்தில் Where results open என்பதற்குக்கீழ் இருக்கும் சிறிய கட்டத்தில் Tick அடையாளத்தினை இடுக. (படம் இல: 1)
❸ இனி கீழ் தரப்பட்டிருக்கும் save என்பதனை சுட்டுக. (படம் இல: 2)
✔ அவ்வளவு தான்.
இனி உங்கள் தேடல் முடிவில் வரும் ஒவ்வொரு இணைய தளங்களும் புதியதொரு Tab இல் தோன்றும்.
 Bonus Tip: இதற்கு இன்னுமொரு வழியும் உண்டு.
உங்கள் Mouse இல் இருக்கும் Scroll Button மூலம் Click செய்து பாருங்கள்.

No comments:

Post a Comment